உப்புக்கோட்டை அருகே கண்மாய்களுக்கு நீர் வரத்து அதிகரிப்பு


உப்புக்கோட்டை அருகே  கண்மாய்களுக்கு நீர் வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 24 Nov 2022 6:46 PM GMT)

உப்புக்கோட்டை அருகே கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தேனி

தேனி மாவட்டத்தில் முல்லைப்பெரியாறு, வைகை ஆறு, கொட்டக்குடி, மஞ்சளாறு, வராக நதி உள்பட பல்வேறு சிற்றாறுகள் உள்ளன. ஆற்றுப்பாசனம் மூலம் கம்பம் பள்ளத்தாக்கு உள்பட மாவட்டம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் பெரிய கண்மாய்கள், குளங்கள் மூலம் தேனி, ஆண்டிப்பட்டி, சின்னமனூர், பெரியகுளம், போடி ஆகிய ஒன்றியங்களில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் தண்ணீரின்றி கிடந்த பல கண்மாய்களும் நிறைந்து வருகிறது. போடி ஊராட்சிக்கு உட்பட்ட டொம்புச்சேரியில் டொம்பச்சியம்மன் கண்மாய், மணியன் கண்மாய், போசியன் கண்மாய் உள்ளிட்ட கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Related Tags :
Next Story