வாடிப்பட்டி அருகே வேன்-கார் மோதல்- தாய்-மகள் உள்பட 4 பேர் படுகாயம்
வாடிப்பட்டி அருகே வேன்-கார் மோதிய விபத்தில் தாய்-மகள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்
வாடிப்பட்டி,
வாடிப்பட்டி நாயக்கர் தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 40) வேன் டிரைவர். இவர் பாண்டிய ராஜபுரத்திலிருந்து வாடிப்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார். உடன் தேவி (40) என்பவர் வந்தார். அதேபோல் மதுரை தனக்கன்குளத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு மகாதேவன் மகன் ரமணன் (22) காரை ஓட்டி வந்தார். அதில் மகாதேவனின் மனைவி கங்கா (45), மகள் ஹரிணி (17) ஆகியோர் வந்தனர். வாடிப்பட்டி நகர்புறசாலை அருகே வந்தபோது இந்த கார் மற்றும் வேன் எதிர்பாராதவிதமாக மோதின. இதில் வேன் கவிழ்ந்தது. காரின் முன் பகுதி நொறுங்கியது. இதில் முத்துப்பாண்டி, தேவி, கங்கா, ஹரிணி ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காரை ஓட்டிய ரமணன காயத்துடன் உயிர் தப்பினார்.
இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா, சப்-இன்ஸ்பெக்டர் சேர்வை ஆகியோர ்வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.