வல்லநாடு அருகே பனை விதைகள் நடும் நிகழ்ச்சி


வல்லநாடு அருகே  பனை விதைகள் நடும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 10 Oct 2022 12:15 AM IST (Updated: 10 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வல்லநாடு அருகே பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

வல்லநாடு அருகே உள்ள செக்காரக்குடி பஞ்சாயத்து பகுதிக்கு உட்பட்ட கிளிகவுண்டர்குளம், செக்காரக்குடி மேலக்குளம் ஆகிய குளங்களில் பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு செக்காரக்குடி பஞ்சாயத்து தலைவர் ராமலெட்சுமி தலைமை தாங்கினார். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பயனாளிகள் மூலமாக பனை விதை நடும் பணி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன், வேளாண்மை துணை இயக்குனர்கள் ஜெயசெல்வின் இன்பராஜ், பழனிவேலாயுதம், கருங்குளம் உதவி இயக்குனர் இசக்கியப்பன், துணை வேளாண்மை அலுவலர் பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் நூர்தீன் செய்திருந்தார்.


Next Story