வருசநாடு அருகே செந்நாய்கள் தாக்கி கடமான் சாவு


வருசநாடு அருகே  செந்நாய்கள் தாக்கி கடமான் சாவு
x

வருசநாடு அருகே செந்நாய்கள் தாக்கி கடமான் இறந்தது

தேனி

மேகமலை வனத்துறையினர் வருசநாடு அருகே மண்ணூத்து வனப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வனப்பகுதியில் உடலில் காயங்களுடன் கடமான் ஒன்று இறந்து கிடந்தது. இதையடுத்து வனத்துறையினர் மேகமலை வனச்சரகர் அஜய்க்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் கால்நடை டாக்டர் வெயிலான் வரவழைக்கப்பட்டு கடமான் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் செந்நாய்கள் தாக்கியதில் கடமான் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து கடமான் உடல் வனப்பகுதியில் புதைக்கப்பட்டது. இறந்தது 2 வயது உடைய கடமான் என்று வனத்துறையினர் கூறினர்.


Next Story