வருசநாடு அருகேவிஷம் குடித்து பெண் தற்கொலை


வருசநாடு அருகேவிஷம் குடித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 22 April 2023 12:15 AM IST (Updated: 22 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வருசநாடு அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

தேனி

வருசநாடு அருகே வாழவந்தாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி நந்தினி (வயது 38). இவர்களுக்கு 3 வயதில் யோகேந்திரன் என்ற ஆண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் மனமுடைந்த நந்தினி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த வருசநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் நந்தினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story