வீரபாண்டி அருகே புகையிலை பொருட்கள் விற்ற முதியவர் கைது


வீரபாண்டி அருகே  புகையிலை பொருட்கள் விற்ற முதியவர் கைது
x
தினத்தந்தி 13 Nov 2022 12:15 AM IST (Updated: 13 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வீரபாண்டி அருகே புகையிலை பொருட்கள் விற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

வீரபாண்டி அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோகுலகண்ணன் தலைமையில் போலீசார் தர்மாபுரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தர்மாபுரி மெயின் தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது 64) என்பவர் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது.


Related Tags :
Next Story