விளாத்திகுளம் அருகே பள்ளியில் விபத்தில்லா தீபாவளி ஒத்திகை பயிற்சி
விளாத்திகுளம் அருகே பள்ளியில் விபத்தில்லா தீபாவளி ஒத்திகை பயிற்சி நடந்தது.
தூத்துக்குடி
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள கமலாபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில் தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை சார்பாக விபத்தில்லா தீபாவளி பண்டிகை கொண்டாடும் பொருட்டு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிறைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி மற்றும் பேரிடர் காலங்களில் விபத்திலிருந்து சிக்கியவர்களை மீட்பது குறித்து விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.
Related Tags :
Next Story