விளாத்திகுளம் அருகேரூ.1 கோடியில் சாலைப்பணிக்கு பூமி பூஜை


விளாத்திகுளம் அருகேரூ.1 கோடியில் சாலைப்பணிக்கு பூமி பூஜை
x
தினத்தந்தி 8 Sept 2023 12:15 AM IST (Updated: 8 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் அருகே ரூ.1 கோடியில் சாலைப்பணிக்கு பூமி பூஜை நடந்தது.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள புளியங்குளம் ஊராட்சியில் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அரசங்குளம் முதல் வேடப்பட்டி வரையில் ரூ.52.42 லட்சம் மதிப்பிலும், புளியங்குளம் முதல் வேடபட்டி வரை ரூ.51.34 லட்சம் மதிப்பிலும் சாலைப்பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் தொடக்க விழாவிற்கான பூமி பூஜை நடந்தது பூமி பூஜையை விளாத்திகுளம் சட்டமன்ற ஜீ.வி.மார்க்கண்டேயன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவபாலன், ஸ்ரீனிவாசன், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் அன்புராஜன், புளியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி, ஒன்றிய குழு உறுப்பினர் சுமதிஇம்மானுவேல், தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து விளாத்திகுளம் அருகே உள்ள வில்வ மரத்து பட்டி நவநீதகிருஷ்ணன் கோவில் வருஷாபிஷேக விழா நடந்தது விழாவில் சிறப்பு அழைப்பாளராக மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார் விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.


Next Story