விளாத்திகுளம் அருகேபா.ஜ.க. செயற்குழு கூட்டம்
விளாத்திகுளம் அருகே பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடந்தது.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் புதூர் மேற்கு மண்டல் தலைவர் சிவபெருமாள் தலைமையில், செயற்குழு கூட்டம் நடந்தது பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட பொதுச் செயலாளர் சரவணகிருஷ்ணன் தலைமை தாங்கினார் ஆன்மீகப் பிரிவு மேம்பாட்டு தலைவர் ராமகிருஷ்ணன், தரவு தளம் மேம்பாட்டு தலைவர் ரகுபாபு ஆகியோர் நிர்வாகிகளிடம் கட்சியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வது, கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வது மற்றும் சமூகப் பிரச்சினைகள் மக்கள் குறைகளை கையில் எடுத்து அதற்கு தீர்வு காண்பது உள்ளிட்டவை குறித்தும், பா.ஜ.கவின் வளர்ச்சி பற்றியும் எடுத்துரைத்தனர். இந்த கூட்டத்தில் புதூர் மேற்கு மண்டல் பொதுச் செயலாளர் பெஞ்சமின் பாண்டியன், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.