விளாத்திகுளம் அருகேமாட்டுவண்டி பந்தயம்


விளாத்திகுளம் அருகேமாட்டுவண்டி பந்தயம்
x
தினத்தந்தி 20 May 2023 12:15 AM IST (Updated: 20 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் அருகே மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள முத்துக்குமாரபுரம் கிராமத்தில் அமைந்துள்ள துர்க்கையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கிராம பொதுமக்கள் சார்பில் மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் நடந்தது .இதில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 34 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. இப்போட்டியானது சிறிய மாடுகளுக்கு 6 கி.மீ தூரமும், பூஞ்சிட்டு மாடுகளுக்கு 5 கி.மீ தூரமும் நிர்ணயம் செய்யப்பட்டு நடத்தப்பட்டது. பின்னர் இப்போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் விழா கமிட்டியினர் சார்பில் பரிசுத்தொகை வழங்கி கவுரவிக்கப்பட்டனர். மாட்டுவண்டி பந்தயத்தை சாலையின் இரு புறமும் ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்து கண்டு களித்தனர்.


Next Story