விளாத்திகுளம் அருகே முதியவர் மர்மச்சாவு


விளாத்திகுளம் அருகே  முதியவர் மர்மச்சாவு
x

விளாத்திகுளம் அருகே முதியவர் மர்மச்சாவு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுச்சாமி (வயது 68). இவர் கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து 25 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார். இவருக்கு காலில் அடிபட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் நேற்றுமுன்தினம் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின்பேரில் குடும்பத்தினர் வீட்டை திறந்து பார்த்துள்ளனர். அங்கு பொன்னுச்சாமி மர்மமான முறையில் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் புதூர் போலீசார் சம்பவ வீட்டுக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story