விளாத்திகுளம் அருகேதொழிலாளி தற்கொலை
விளாத்திகுளம் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே உள்ள குறளயம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த உமையணன் மகன் மணிச்செல்வம் (வயது 32) கூலித்தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. மேலும், இவர் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று திடீரென்று ஊருக்கு மேற்கில் உள்ள புளியமர தோப்பில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story