விருத்தாசலம் அருகே விருதகிரி ஏரி ஆக்கிரமிப்பு அளவீடு செய்யும் பணி


விருத்தாசலம் அருகே  விருதகிரி ஏரி ஆக்கிரமிப்பு அளவீடு செய்யும் பணி
x
தினத்தந்தி 25 Sept 2022 12:15 AM IST (Updated: 25 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே விருதகிரி ஏரி ஆக்கிரமிப்பு அளவீடு செய்யும் பணி நடைபெற்றது.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த எம்.பட்டி கிராமத்தில் 6.72 ஹெக்டேர் பரப்பளவில் விருதகிரி ஏரி அமைந்துள்ளது. மழைக்காலங்களில் அப்பகுதியில் பெய்யும் மழை நீரை இந்த ஏரியில் சேமித்து வைத்து விவசாய பாசனத்திற்கு விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர். நாளடைவில் இந்த ஏரியை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமித்து கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வந்தனர். மேலும் இந்த ஏரியில் இருந்து செல்லும் வாய்க்காலையும் அவர்கள் ஆக்கிரமித்தனர். மேலும் ஏரி முழுவதும் தூர்ந்து போனதால் மழைக்காலங்களில் தண்ணீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் நிலத்தடி நீரும் வெகுவாக குறைந்தது. இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகப்பிரியா வசந்தகுமார் ஏரியை முழுமையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருவாய்த்துறையினருக்கு கோாிக்கை வைத்தார். அதன் பேரில் இந்த ஏரியை முழுவதுமாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற தாசில்தார் தனபதி நில அளவைத்துறைக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் நில அளவைத்துறை வட்டசார் ஆய்வாளர் ராஜ் மோகன், நில அளவர் சுற்றுக்குழு நேதாஜி, கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன், கிராம உதவியாளர் ரெஜினா ஆகியோர் கொண்ட குழுவினர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகப்பிரியா வசந்தகுமார், மங்கலம்பேட்டை போலீசார் முன்னிலையில் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதில் 4 ஏக்கர் பரப்பளவில் ஏரியில் ஆக்கிரமிப்பு செய்ப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விரைவில் தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ள ஏரியின் இடம் முழுவதும் மீட்கப்படும் என வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.


Next Story