ேதனி அருகே2 கார்கள், மோட்டார்சைக்கிள் அடுத்தடுத்து மோதல்:6 பேர் காயம்


ேதனி அருகே2 கார்கள், மோட்டார்சைக்கிள் அடுத்தடுத்து மோதல்:6 பேர் காயம்
x
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே 2 கார்கள், மோட்டார்சைக்கிள்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 6 பேர் காயம் அடைந்தனர்.

தேனி

தேனி அருகே ஆர்.எம்.டி.சி. காலனி பகுதியில் தேனி-போடி சாலை, திண்டுக்கல்-குமுளி சாலை என 4 சாலைகள் சந்திக்கிறது. இந்த இடத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. நேற்று இந்த இடத்தில், போடியில் இருந்து தேனி நோக்கி வந்த ஒரு கார், கொடைக்கானலில் இருந்து கோடாங்கிபட்டி நோக்கி சென்று கொண்டிந்த கார் மீது மோதியது. இதில் கொடைக்கானலில் இருந்து வந்த கார் கவிழ்ந்தது. அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மீது அந்த கார் இடித்தது. இந்த விபத்தில் 2 கார்களின் டிரைவர்கள், மோட்டார் சைக்கிளில் சென்றவர் மற்றும் காரில் பயணம் செய்த 3 பேர் என மொத்தம் 6 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். காயம் அடைந்தவர்கள் தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story