கோபி அருகே மோட்டார்சைக்கிள்-வேன் மோதல்: கூலித்தொழிலாளி பலி; கணவன்-மனைவி படுகாயம்


கோபி அருகே மோட்டார்சைக்கிள்-வேன் மோதல்: கூலித்தொழிலாளி பலி; கணவன்-மனைவி படுகாயம்
x

மோட்டார்சைக்கிள்-வேன் மோதிக்கொண்ட விபத்தில் கூலித்தொழிலாளி பலியானாா். கணவன்-மனைவி படுகாயம் அடைந்தனா்.

ஈரோடு

கடத்தூர்:

கோபி அருகே உள்ள கள்ளாகுளத்தை சேர்ந்தவர் குமார் (வயது 35). கூலித்தொழிலாளி. திருமணமாகாதவர். இந்த நிலையில் நேற்று முன்தினம் குமார் நம்பியூர் ரோட்டில் மோட்டார்சைக்கிளில் கெட்டிச்செவியூருக்கு சென்றுகொண்டு இருந்தார்.ஊஞ்ச மரத்து கருப்பராயன் கோவில் அருகே சென்றபோது எதிரே வந்த வேனும், மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் தூக்கிவீசப்பட்ட குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தார்கள்.

ஆனால் செல்லும் வழியிலேயே குமார் இறந்துவிட்டார். மேலும் இந்த விபத்தில் சிக்கிய வேன் ரோட்டு ஓரத்தில் இறங்கி நின்றது. அதை ஓட்டிவந்த டிரைவர் பாலகுமார் என்பவரும், அதில் பயணம் செய்த அவருடைய மனைவி லோகேஷ்வரியும் படுகாயம் அடைந்தார்கள். அவர்கள் கோபியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story