இருளில் மூழ்கிய நீடாமங்கலம் ரெயில் நிலையம்


இருளில் மூழ்கிய நீடாமங்கலம் ரெயில் நிலையம்
x
தினத்தந்தி 15 Jun 2023 12:15 AM IST (Updated: 15 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குறைந்த அளவு மின் விளக்குகள் எரிந்ததால் இருளில் மூழ்கிய நீடாமங்கலம் ரெயில் நிலையம்

திருவாரூர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் ரெயில் நிலையம் வழியாக காரைக்கால்- எர்ணாகுளம், மன்னார்குடியிலிருந்து சென்னை கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், மற்றும் காரைக்கால்- திருச்சி, திருச்சி- வேளாங்கண்ணி, மன்னார்குடி-திருச்சி பாசஞ்ஜர் ரெயில்கள், மற்றும் திருப்பதி, பெங்களூரு, கோவா செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில்களும் செல்கின்றன. இந்த ரெயில்கள் மூலம் 100-கணக்கான பயணிகள் நீடாமங்கலத்திலிருந்து பல ஊர்களுக்கும் சென்று வருகின்றனர். இதுமட்டுமின்றி நாள்தோறும் சரக்கு ரெயில்கள் நீடாமங்கலம் வழியாக சென்று வருகின்றன. இந்த சூழ்நிலையில் கடந்த இருநாட்களாக நீடாமங்கலம் ரெயில் நிலையத்தில் குறைந்த அளவே மின் விளக்குகள் எரிந்தன. இதனால் ரெயில் நிலையம் ஆங்காங்கே இருளில் மூழ்கியது. மேலும் ரெயிலில் ஏறி இறங்கி நடைமேடையில் நடந்து செல்ல பொதுமக்கள் மற்றும் முதியவர்கள் மிகவும் சிரமமடைந்தனர். உயர் மின்கோபுர விளக்கு வசதிகள் இருந்தும் கூட அதனை அதிகம் பயன்படுத்துவதில்லை என பயணிகள் தெரிவித்தனர்.


Next Story