வேப்பமுத்து கிலோ ரூ.25-க்கு விற்பனை
தாயில்பட்டி பகுதியில் வேப்பமுத்து கிலோ ரூ.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தாயில்பட்டி,
தாயில்பட்டி அருகே உள்ள வெற்றிலையூரணி, தெற்கு ஆணைகூட்டம், மேல ஒட்டம்பட்டி, மடத்துப்பட்டி, கணஞ்சாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் எண்ணற்ற வேப்ப மரங்கள் உள்ளன. எண்ணெய் நிறுவனங்கள் தற்போது வேப்பமுத்து நல்ல விலைக்கு வாங்கப்படும் என அறிவித்துள்ளனர்.
இந்தநிலையில் தற்போது விவசாய நிலங்களில் உழவு செய்யும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் ஆண்களுக்கு மட்டும் விவசாய பணி கிடைத்து வருகிறது.பெண் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் வேப்பமரத்திலிருந்து தானாக விழும் வேப்ப முத்து சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கூறியதாவது:-
வெற்றிலையூரணி பகுதிகளில் எண்ணற்ற வேப்பமரங்கள் உள்ளன. தற்போது வேப்பமுத்துவுக்கு நல்ல விலை கிடைக்கிறது. எங்களுக்கு விவசாய பணிகள் எதுவும் இல்லை. ஆதலால் நாங்கள் வேப்பமுத்துவை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். சிவகாசி மற்றும் சாத்தூர் மார்க்கெட்டில் கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை செய்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.