6 மையங்களில் நீட் தேர்வு
மாவட்டத்தில் இன்று 6 மையங்களில் நடைபெறும் நீட்தேர்வினை 3,295 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
மாவட்டத்தில் இன்று 6 மையங்களில் நடைபெறும் நீட்தேர்வினை 3,295 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
நீட்தேர்வு
இதுகுறித்து மாவட்டத்திற்கான நீட் தேர்வு பொறுப்பு அலுவலர் ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் சுந்தரமகாலிங்கம் கூறியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் இன்று விருதுநகர் கே.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பி.எஸ்.சி. ஆங்கிலப்பள்ளி, திருத்தங்கல் ஏ.ஏ.ஏ இன்டர்நேஷனல் பள்ளி, அருப்புக்கோட்டை மினரவா பப்ளிக் பள்ளி, சத்திரப்பட்டி ஆறுமுகம் பழனி குரு மாடர்ன்பள்ளிஆகிய 6 மையங்களில் நடைபெறுகிறது.
இந்த தேர்வினை 3,295 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர் இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கும் தேர்வு மாலை 5.20 மணி அளவில் முடிவடைகிறது. அலுவலர்கள் ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் அப்பள்ளி முதல்வர் கண்காணிப்பாளராக பணியாற்றுவார். மேலும் 2 துணை கண்காணிப்பாளர்களும் பணியமத்தப்படுவர்.
கண்காணிப்பாளர்கள்
24 மாணவர்கள் உள்ள ஒரு தேர்வு அறைக்கு தலா 2 பேர்அறை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்படுவர். அந்த வகையில் 274 தேர்வுஅறை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படுவர்.
அனைத்து மையங்களிலும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் தேர்வு மையங்களுக்கு தேவையான பஸ் வசதி, தேர்வு மையங்களில் உரிய பாதுகாப்பு வசதி, மருத்துவ வசதி, உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என மின்வாரியத்திற்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 197 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர்.