நீத்தார் நினைவு தினம் அனுசரிப்பு
நாகையில் நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
நாகையில் நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
கப்பலில் தீவிபத்து
1944-ம் ஆண்டு மும்பையில் உள்ள துறைமுகத்தில் கப்பலில் தீவிபத்து ஏற்பட்டு வெடித்து சிதறியது. அப்போது தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 66 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர்.இந்த தீவிபத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
இந்த நிகழ்ச்சியை நினைவு கூரும் வகையில் ஆண்டு தோறும் ஏப்.14-ந் தேதி நீத்தார் நினைவு தினமாக தேசிய அளவில் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
நீத்தார் நினைவு தினம்
அதன்படி நேற்று நாகை தீயணைப்பு நிலையத்தில் நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணபாபு தலைமையில் தீயணைப்பு துறை அலுலர்கள் நினைவு தூபியில் மலர்வளையம் வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் நேற்று முதல் 20-ந்தேதி வரை பொதுமக்கள் கூடும் இடம் மற்றும் பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது என்று தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.