நேரு பிறந்த நாள் விழா


நேரு பிறந்த நாள் விழா
x

ராணிப்பேட்டையில் நேரு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை முத்துக்கடை பகுதியில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் விழா, காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் தலைவர் வக்கீல் அண்ணாதுரை தலைமை தாங்கி, முத்துக்கடையில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் பஞ்சாட்சரம் நேருவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story