நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் 7 கடைகளுக்கு 'சீல்' வைப்பு


நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் 7 கடைகளுக்கு சீல் வைப்பு
x

உள் வாடகைக்கு விட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் 7 கடைகளை மூடி பொதுப்பணித்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

திருநெல்வேலி

உள் வாடகைக்கு விட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் 7 கடைகளை மூடி பொதுப்பணித்துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.

கடைகள்

நெல்லை கொக்கிரகுளத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்குள்ள அரசு ஊழியர்கள் மற்றும் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து செல்லும் பொதுமக்கள் வசதிக்காக டீக்கடை, சிற்றுண்டி கடைகள் வைக்க பல ஆண்டுகளுக்கு முன்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த கடைகள் தற்போது மேம்பாடு செய்யப்பட்டு செயல்பட்டு வந்தன.

இந்த நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், கடந்த வாரம் இந்த கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது கடைகளுக்கு உரிமம் பெற்றவர்களில் 7 கடைக்காரர்கள் இறந்து விட்டதும், அவர்களது பெயரில் வேறு நபர்கள் கடைகளை நடத்தி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது. பெயர் மாற்றம் செய்யப்படாமல் கடைகளை உள் வாடகைக்கு விட்டிருப்பது தெரியவந்தது.

'சீல்' வைப்பு

இதையடுத்து அந்த 7 கடைகளை காலி செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில் நேற்று அதிகாரிகள் கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு வந்தனர். அங்கு 3 கடைகளில் உரிமைதாரர்கள் தங்களது ஆவணங்களை காண்பித்தனர். மற்றவர்கள் உரிய ஆவணங்களை காட்டவில்லை.

இதையடுத்து அங்குள்ள ஓட்டல்கள், டீக்கடைகள் என மொத்தம் 7 கடைகளை பூட்டி 'சீல்' வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story