பாம்பனில் நீர்மோர் பந்தல்
அ.தி.மு.க. சார்பில் பாம்பனில் நீர்மோர் பந்தல் ெதாடங்கி வைக்கப்பட்டது.
பனைக்குளம்,
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் எம்.ஏ.முனியசாமி ஆலோசனையின்படி மண்டபம் அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் பாம்பன் கிளை சார்பில் மோர்பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. மோர் பந்தலை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பாம்பன் செயலாளர் அசன், அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜானகிராமன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாநில எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளர் சாமிநாதன், மாவட்ட துணைச்செயலாளர் கவிதா சசிகுமார், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஜி.எம்.ஸ்டாலின் என்ற ஜெயச்சந்திரன், ராமநாதபுரம் நகர செயலாளர் பொறியாளர் பால்பாண்டியன், ராமேசுவரம் நகர் செயலாளர் கே.கே.அர்ஜுனன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணகுமார், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் எஸ்.கே.ஜி.செல்வராஜ் மற்றும் பாலா உள்பட அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.