இயற்கைக்கு மாறாக கன்றுகுட்டியை பலாத்காரம் செய்த நேபாள வாலிபர் கைது


இயற்கைக்கு மாறாக கன்றுகுட்டியை பலாத்காரம் செய்த  நேபாள வாலிபர் கைது
x

பெரம்பலூர் அருகே இயற்கைக்கு மாறாக கன்றுகுட்டியை பலாத்காரம் செய்த நேபாள நாட்டைச் சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பெரம்பலூர்

குன்னம்

பலாத்காரம்

பெரம்பலூர் அருகே பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் அருமடல் கிராமத்திற்கு செல்லும் பிரிவு சாலை உள்ளது. அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கிரஷர் அருகில் வசித்து வருபவர் பெரியசாமி. இவரது மனைவி பெருமாயி (வயது 40). இவர் மாடுகளை வளர்த்து வருகிறார். பட்டியில் கட்டியிருந்த கன்று குட்டிகளில் ஒன்று வெளியே சுற்றி வந்துள்ளது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், கன்றுக்குட்டி தெருவில் சுற்றிவரும் தகவலை பெருமாயியிடம் தெரிவித்துள்ளனர். பெருமாயி பட்டியில் வந்த பார்த்தபோது, வேறு ஒரு கன்றுக் குட்டியும் காணவில்லை. 2 கன்று குட்டிகளையும் தேடும்போது ஒரு கன்றுக்குட்டி பின்னங்காலில் ஆண்கள் அணியும் பனியன் துணி கட்டப்பட்ட நிலையில் வந்துள்ளது. இதுபற்றி விசாரித்தபோது நேபாள நாட்டை சேர்ந்த சிவன் என்ற (21) வாலிபர் பெருமாயி வீட்டின் பட்டியிலிருந்து கன்று குட்டியை அவிழ்த்து, அவர் வேலை செய்யும் தனியார் நிறுவனத்திற்கு ஓட்டி சென்றதாகவும், பின்னர் கன்றுக்குட்டியின் பின்னங்கால்களை கட்டி இயற்கைக்கு மாறாக பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

சிறையில் அடைப்பு

இதுகுறித்து பெருமாயி கொடுத்த புகாரின் பேரில் பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராம், சிவனை கைது செய்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். பின்னர் மருவத்தூர் போலீசார் நேபாள நாட்டைச் சேர்ந்த சிவனை பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இயற்கைக்கு மாறாக கன்றுகுட்டியை நேபாள நாட்டை சேர்ந்த வாலிபர் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடந்த சில வாரங்களுக்கு முன்பு 14 வயது சிறுமி பலாத்கார சம்பவத்தில் வடநாட்டை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கன்றுகுட்டியை பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story