நெரிஞ்சிபேட்டைகாவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி சாவு
நெரிஞ்சிப்பேட்டை காவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
அம்மாபேட்டை
நெரிஞ்சிப்பேட்டை காவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
தொழிலாளி
அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிபேட்டை மீராசா வீதியில் வசித்தவர் சொக்கப்பன் (வயது 56). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அருகில் உள்ள காவிரி ஆற்றுக்கு சென்று குளித்து கொண்டிருந்தார். ஆழமான பகுதியில் அவர் குளித்துள்ளார். சிறிது நேரத்தில் அவர் தண்ணீரில் மூழ்கினார்.
இதை பார்த்த அங்கு குளித்து கொண்டிருந்தவர்கள் அவரை மீட்டனர். பின்னர் இதுபற்றி சொக்கப்பனின் மனைவி தங்கமணிக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து அவர் அங்கு சென்று பார்த்தபோது சொக்கப்பன் மயங்கிய நிலையில் கிடந்தார்.
சாவு
உடனே சொக்கப்பனை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு் சொக்கப்பன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இறந்த சொக்கப்பனுக்கு தங்கமணி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.