திருநங்கையை கத்தியால் குத்தியவர்களுக்கு வலைவீச்சு


திருநங்கையை கத்தியால் குத்தியவர்களுக்கு வலைவீச்சு
x

திருநங்கையை கத்தியால் குத்தியவர்களுக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை

விராலிமலை அருகே சாரணக்குடியை சேர்ந்தவர் பாலா என்கிற ஸ்ரீஜா (வயது 19). திருநங்கையான இவர் தற்போது விராலிமலை அம்மன் கோவில் தெருவில் உள்ள மற்றொரு திருநங்கை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் விராலிமலை மாதிரிப்பட்டி பிரிவு அருகே தனியார் பேக்கரி முன்னால் ஸ்ரீஜா நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர் அவரை தகாத உறவுக்கு அழைத்துள்ளனர். அதற்கு வரமறுத்த ஸ்ரீஜாவை அந்த மர்ம நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் வயிற்றில் குத்திவிட்டு ஸ்ரீஜா கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர். இதில் படுகாயமடைந்த ஸ்ரீஜாவை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநங்கையை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story