கோவில்பட்டியில்நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா


கோவில்பட்டியில்நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா
x
தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-25T00:17:13+05:30)

கோவில்பட்டியில்நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி செல்லப்பாண்டியன் நகர் மகாபுவன காந்தாரியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா, நற்பணி இயக்கம் மற்றும் தேவர் இளைஞர் அணி சார்பில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு முருகேச பாண்டியன் தலைமை தாங்கினார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்க தலைவர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்கம் தலைவர் செல்லத்துரை, நேதாஜி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அன்னதானத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தேவர் இன மக்கள் பாதுகாப்பு இயக்கம் இசக்கி பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story