நேதாஜி சுபாஷ் சேனை ஆர்ப்பாட்டம்


நேதாஜி சுபாஷ் சேனை ஆர்ப்பாட்டம்
x

நேதாஜி சுபாஷ் சேனை ஆர்ப்பாட்டம் நடந்தது

திருநெல்வேலி

நெல்லை வண்ணார்பேட்டையில் நேதாஜி சுபாஷ் சேனை சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. நேதாஜி சுபாஷ் சேனை தலைவர் வக்கீல் மகாராஜன் தலைமை தாங்கினார். கடந்த 2018-ம் ஆண்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மருதூரைச் சேர்ந்த முருகேசன் வாகைகுளத்தை சேர்ந்த மாணிக்கராஜ் ஆகியோர் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டதாகவும், இதற்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐகோர்ட்டு உத்தரவுப்படி சி.பி.சி.ஐ.டி போலீசார் விரைவாக விசாரணையை முடிக்க வேண்டும். இல்லையெனில் இந்த விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில மக்கள் தொடர்பு செயலாளர் தங்கமாரி ராஜா, தென் மண்டல செயலாளர் சேகர் பாண்டியன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் கணேசன், நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் பிச்சுமணி பாண்டியன், நெல்லை மேற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மருதுபாண்டி, நெல்லை மாநகர் மாவட்ட இணை செயலாளர் கார்த்தி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் தளவாய் பாண்டியன், பாளையங்கோட்டை ஒன்றிய தலைவர் சக்திவேல், நெல்லை தெற்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story