நேதாஜி பிறந்த நாள் விழா


நேதாஜி பிறந்த நாள் விழா
x

சாயல்குடியில் நேதாஜி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

ராமநாதபுரம்

சாயல்குடி,

சாயல்குடியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 127-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு சாயல்குடி முக்குலத்தோர் சங்க தலைவர் வில்வத்துரை தலைமை தாங்கினார். சங்கச் செயலாளர் முனியசாமி பாண்டியன், பொருளாளர் முனியசாமி, முன்னாள் தலைவர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலை மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் உருவப்படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது, இந்நிகழ்ச்சியில் பார்வர்டு பிளாக் கட்சி துணைத்தலைவர் சுப்பிரமணியன், நேதாஜி பவுண்டேஷன் சார்பாக மாயகிருஷ்ணன், பார்வர்டு பிளாக் மாணவரணி வெள்ளை பாண்டியன், எஸ்.கீரந்தை பாண்டி, கணேஷ், பிரபாகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை சாயல்குடி முக்குலத்தோர் உறவின்முறை நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story