ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம்


ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம்
x

ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம்

தஞ்சாவூர்

அய்யம்பேட்டை அருகே சூலமங்கலம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9.8 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு தமிழக அரசு தலைமை கொறடா கோவி. செழியன் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர்கள் ஸ்ரீகாந்த், சுகபுத்ரா, ஒன்றியக்குழு தலைவர் சுமதி கண்ணதாசன், பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், நகர செயலாளர் வக்கீல் டி.பி.டி.துளசி அய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சுசிலா பத்மநாபன் வரவேற்றார். விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கலந்து கொண்டு புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்தார். இதில் ஒன்றிய கவுன்சிலர் சத்யா சுர்ஜித், அய்யம்பேட்டை பேரூராட்சி தலைவர் புனிதவதி குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியம் வேலூர் ஊராட்சி பள்ளியில் ரூ.18 லட்சம் மதிப்பிலான புதிய வகுப்பறை கட்டிடம், திருமாந்தூர் ஊராட்சியில் ரூ.9 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பிலான புதிய அங்கன்வாடி கட்டிடம், வீரா கண் ஊராட்சியில் ரூ.10 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பிலான புதிய அங்கன்வாடி கட்டிடம் ஆகியவற்றை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். இதில் திருப்பனந்தாள் ஒன்றிய துணைத்தலைவர் அண்ணாதுரை, ஒன்றிய துணைச் செயலாளர் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story