புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம்


புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம்
x

புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம்

நாகப்பட்டினம்

திருமருகல் ஒன்றிய புதிய பாரத எழுத்தறிவு திட்டம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் திட்டச்சேரி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. ஊர்வலத்தை பள்ளியின் தலைமையாசிரியர் நடராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர் சந்தானம், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் வேம்பு மற்றும் ஆசிரிய பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள், புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இந்த எழுத்தறிவு திட்டமானது ஒன்றியத்தில் 53 மையங்களில் நடைபெறுகின்றது. இதில் கற்போருக்கு எழுதுப் பொருட்கள் மற்றும் புத்தகம் வழங்கப்பட்டு வருகிறது.


Next Story