பெரியதாழை பள்ளியில் ரூ.1 கோடியில் புதிய கட்டிடம்; கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார்


பெரியதாழை பள்ளியில் ரூ.1 கோடியில் புதிய கட்டிடம்;  கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார்
x
தினத்தந்தி 12 Dec 2022 12:15 AM IST (Updated: 12 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெரியதாழை பள்ளியில் ரூ.1 கோடியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார் .

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே பெரியதாழை ஆர்.சி தொடக்கபள்ளியில் புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என ஊர் மக்கள், கனிமொழி எம்.பி.யிடம் முறையிட்டனர். அதன்படி அவரது பாராளுமன்ற நிதியில் பள்ளியில் 6 வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருந்தார். அதன்படி கட்டிடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு கனிமொழி எம்.பி. தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்ததுடன், அதற்கான கல்வெட்டையும் திறந்து வைத்தார். அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வரவேற்றார். தொடர்ந்து கனிமொழி எம்.பி., அங்குள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

நிகழ்ச்சியில் பெரியதாழை பங்குத்தந்தை சுசீலன், திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா, யூனியன் ஆணையாளர் ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பிரம்மசக்தி, சண்முகையா எம்.எல்.ஏ., மாவட்ட ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், முன்னாள் மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம், சாத்தான்குளம் ஒன்றிய தி.மு.க. செயலர்கள் பாலமுருகன், ஜோசப், மாநில பொதுக்குழு உறுப்பினர் இந்திரகாசி, நடுவக்குறிச்சி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஆனந்தகுமார், ஒன்றிய அவைத் தலைவர் ராஜபாண்டி, மாவட்ட பிரதிநிதிகள் சித்திரை, அந்தோணி ஜெயசீலன், சந்தியாகு, சரவணன், பஞ்சாயத்து தலைவர்கள் பிரதீபா (பெரியதாழை), திருக்கல்யாணி (சாஸ்தாவிநல்லூர்), சாந்தா (தாமரைமொழி), ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் மேரிஜெயசித்ரா, ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் ரோஸ்லின் கலாவதி, முன்னாள் பொதுக்குழு உறுப்பனர் பசுபதி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சேவியர் விஜேஸ், முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன், சாத்தான்குளம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபதி, ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ரனீஷ், ஒன்றிய மீனவரணி அமைப்பாளர் ரமேஷ், சாத்தான்குளம் நகர அவைத் தலைவர் சண்முகசுந்தரம், நகர பொருளாளர் சந்திரன், ஒன்றிய சிறுபாண்மை பிரிவு அமைப்பாளர் அப்துல்சமது, ஒன்றிய பிரதிநிதி ரவி, தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் லூர்துமணி, மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறப்பினர் சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர் பிச்சிவிளை சுதாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story