அங்கன்வாடி மையத்துக்கு ரூ.19 லட்சத்தில் புதிய கட்டிடம்
அங்கன்வாடி மையத்துக்கு ரூ.19 லட்சத்தில் புதிய கட்டிடத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்
திருச்சி
திருச்சி உறையூர் தாக்கர் ரோடு பகுதியில் 10-வது வார்டு வள்ளுவர்தெரு மற்றும் செல்வ முத்துமாரியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் ஆழ்துளை கிணற்றுடன் ரூ.3 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பில் சிறிய குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பஞ்சவர்ணசாமி கோவில் தெருவில் ரூ.19 லட்சத்தில் அங்கன்வாடி மையக்கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு அவற்றை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையாளர் ஆர்.வைத்திநாதன், மாநகர பொறியாளர் சிவபாதம் மற்றும் மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story