அரசு பள்ளியில் சைக்கிள்கள் நிறுத்த புதிய கட்டிடம்
தலைஞாயிறு அருகே அரசு பள்ளியில் சைக்கிள்கள் நிறுத்த புதிய கட்டிடம்; ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
வாய்மேடு:
தலைஞாயிறு ஒன்றியம் மணக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட சைக்கிள் நிறுத்தும் கட்டிடத்தை ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ராதை தலைமை தாங்கினார். ஆசிரியர் திருமுருகன் வரவேற்றார். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் அவை பாலசுப்ரமணியன், மாவட்ட வேளாண் விற்பனைக்குழு உறுப்பினர் சவுரிராஜன், பேரூராட்சி தலைவர் செந்தமிழ் செல்வி பிச்சையன், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் 150 மாணவர்களுக்கு மரக்கன்றுகளை ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. வழங்கினார். இதில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் சரவணன் நன்றி கூறினார்.