அரசு அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்


அரசு அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்
x
தினத்தந்தி 8 Jun 2022 6:30 PM GMT (Updated: 2022-06-09T00:01:19+05:30)

வடபாதிமங்கலத்தில் அரசு அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

வருவாய் அலுவலக கட்டிடம்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகில், வருவாய் அலுவலர் அலுவலகமும் செயல்பட்டு வந்தது.ஒரே இடத்தில் இரு அலுவலகங்களும் செயல்பட்டு வந்ததால் அரசு சான்றிதழ்கள், அரசின் நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் பெற்று வந்தனர். நாளடைவில் வருவாய் அலுவலக கட்டிடம் சேதமடைந்ததால் இங்கிருந்து வாடகை கட்டிடத்திற்கு அலுவலகம் மாற்றப்பட்டது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

புதிதாக கட்ட கோரிக்கை

இந்தநிலையில் சேதமடைந்த வருவாய் அலுவலகம் கட்டிடத்தை சுற்றி தற்போது முட்கள் அதிகளவு வளர்ந்து புதர்போல காட்சி அளிக்கிறது. இதுவரை அந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு அதே இடத்தில் புதிதாக வருவாய் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்பது வேதனையான விஷயமாகும். ஆகவே, சேதமடைந்த அரசு கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story