தங்கச்சிமடம் பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிட பணிகள்


தங்கச்சிமடம் பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிட பணிகள்
x
தினத்தந்தி 29 Nov 2022 6:45 PM GMT (Updated: 29 Nov 2022 6:45 PM GMT)

தங்கச்சிமடம் பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிட பணிகளை நவாஸ்கனி எம்.பி. தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடம் பகுதியில் புனித யாகப்பர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளிக்கு புதிதாக வகுப்பறைகள் கட்டுவதற்காக ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி தனது தொகுதி நிதியான ரூ.24 லட்சத்தை ஒதுக்கி உள்ளார்.

இதை தொடர்ந்து வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் நவாஸ்கனி எம்.பி. பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் பிரபு, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ரவிச்சந்திர ராமவன்னி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் வேலுச்சாமி, யூனியன் கவுன்சிலர் பேரின்பம், பங்குத் தந்தைகள் ஜீவன், மொக்கன்ரே, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் வரிசை முகமது, பரதவ சமுதாயத் தலைவர் சாம்சன், பாரம்பரிய மீனவர் சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சின்னத்தம்பி, விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகள் சேசு ராஜா, சகாயம், ஆல்வின் உள்ளிட்ட ஏராளமான மீனவர்களும் மற்றும் பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story