ரூ.26 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டும் பணி


ரூ.26 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டும் பணி
x
தினத்தந்தி 25 Jan 2023 12:45 AM IST (Updated: 25 Jan 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

ரூ.26 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டும் பணி நடந்தது.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொட்டாரக்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 2 வகுப்பறை கட்டிடங்கள் சேதமடைந்து இருந்தன. இந்த 2 வகுப்பறை கட்டிடங்களும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. இதனால் பள்ளி மாணவர்களுக்கு போதுமான இடவசதி இல்லாமல் இருப்பதாக பள்ளியின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதையடுத்து சிறப்பு திட்டம் 2022 - 23-ன் கீழ் ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் இந்த பள்ளிக்கு புதிதாக 2 வகுப்பறை கட்டிடங்கள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அப்பள்ளியில் கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ராஜீவ்காந்தி தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர் பாலமுருகன் அடிக்கல் நாட்டினார். இதில் ஒன்றிய பொறியாளர் பாலசந்தர், தலைமை ஆசிரியர் சவுந்தரராஜன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் வீரசெந்தில், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story