ரூ.18½ லட்சத்தில் புதிய வகுப்பறைகள்


ரூ.18½ லட்சத்தில் புதிய வகுப்பறைகள்
x

ரூ.18½ லட்சத்தில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான பணியை எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியம் வெலக்கல்நத்தம் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட செட்டேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்காக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.18½ லட்சம் நிதி ஒதிக்கீடு செய்து கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும், ஜோலார்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி கலந்து கொண்டு பூஜை செய்து புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான பணியினை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் ஜெயாசுந்தரேசன், வெலக்கல்நத்தம் ஊராட்சிமன்ற தலைவர் ராமன், துணத் தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் அரசு துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story