புதிய சி.எம்.சி. கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்


புதிய சி.எம்.சி. கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
x

புதிய சி.எம்.சி. கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிகாட்சி மூலம் இன்று திறந்து வைக்கிறார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம், பூட்டுத் தாக்கு அருகே உள்ள கன்னிகாபுரம் பகுதியில் புதிய சி.எம்.சி. மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இதனையும், ராணிப்பேட்டை அருகே பாரதி நகர் பகுதியில் கட்டப்பட்டுள்ள ராணிப்பேட்டை மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தையும் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 20-ந் தேதி நேரில் திறந்து வைக்க இருந்தார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்தநிலையில் முதல்-அமைச்சருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ்நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இன்று (சனிக்கிழமை) காலை 10.45 மணி அளவில் தலைமைச் செயலகத்திலிருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக சி.எம்.சி புதிய மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைக்கிறார் என்று செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story