ரூ.2 கோடியில் வணிக வளாகம்
ரூ.2 கோடியில் வணிக வளாகம்
தாராபுரம்
தாராபுரம் தினசரி மார்க்கெட் பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் இடத்தில் வியாபாரிகள் தொழில் செய்யும்போது பொதுமக்கள் மழைதண்ணீரில் நடந்து சென்று மிகவும் சிரமப்பட்டும் வந்தனர். அதனை அறிந்து நகராட்சி அனைத்து உறுப்பினர்கள் ஒத்துழைப்போடு புதிய வணிக கட்டிடம் கட்ட அரசிடம் இருந்து நிதி பெறப்பட்டது. அதற்கான பணிகள் கூடிய விரைவில் தொடங்க புதிய வணிக வளாகம் ரூ.2.03 கோடி செலவில் அமைக்கப்பட்ட உள்ளது.
நகராட்சிக்குட்பட்ட 19-வது வார்டு பகுதியில் அமைந்துள்ள தினசரி மார்க்கெட்டில் புதிய வணிக வளாகம் கட்டுவதற்கு பழைய இடத்தில் தற்போது வியாபாரிகள் நலன் கருதி வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் மக்கள் போக்குவரத்து நடவடிக்கைகள் போன்ற விவரங்கள் குறித்து நகராட்சி அதிகாரிகளுடன் நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் ஆய்வு செய்தார்.
இதனால் தற்போது இருக்கும் காய்கறி கடைகள், மளிகை கடைகள், பலசரக்கு கடைகள், கோழிக்கடைகள் ஆகியவற்றை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய ஆய்வு மேற்கொண்டார். அதன்படி பழைய மார்க்கெட் வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு கடந்த 2 நாட்களாக பழைய கட்டிடத்தை இடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.