6 இடங்களில் புதிய கான்கிரீட் கசிவுநீர் பாலங்கள்


6 இடங்களில் புதிய கான்கிரீட் கசிவுநீர் பாலங்கள்
x

கீழ்பவானி வாய்க்காலில் 6 இடங்களில் புதிய கான்கிரீட் கசிவுநீர் பாலங்கள் கட்டப்படுகின்றன. தண்ணீர் திறப்புக்கு முன்பாக பணிகளை முடிக்க பொதுப்பணித்துறையினர் தீவிரமாக உள்ளனர்.

ஈரோடு

பெருந்துறை

கீழ்பவானி வாய்க்காலில் 6 இடங்களில் புதிய கான்கிரீட் கசிவுநீர் பாலங்கள் கட்டப்படுகின்றன. தண்ணீர் திறப்புக்கு முன்பாக பணிகளை முடிக்க பொதுப்பணித்துறையினர் தீவிரமாக உள்ளனர்.

கசிவுநீர் பாலங்கள்

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய பாசன வாய்க்காலாக இருப்பது கீழ்பவானி வாய்க்கால். பவானிசாகர் அணைக்கட்டில் இருந்து கரூர் மாவட்டத்தில் உள்ள கடைமடை வரை 65 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கசிவு நீர் பாலங்கள் பழுதடைந்து விட்டன.

கடந்த 10 ஆண்டுகளில் இந்த கசிவு நீர் பாலங்களில் ஏற்பட்ட நீர் கசிவினால் வாய்க்கால் கரை உடைந்து அடிக்கடி தண்ணீர் வெளியேறிவிட்டது. இதனால் கரை சேதமடைந்ததோடு, வாய்க்கால் ஓரம் இருந்த விளைநிலங்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்து பயிர்களும் நாசமடைந்தன.

பணிகள் தீவிரம்

இதன்காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் பழுதடைந்த கசிவுநீர் பாலங்களை அகற்றிவிட்டு புதிதாக கட்டவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பொதுப்பணித்துறை சார்பில் புதிய கான்கிரீட் கசிவு பாலங்கள் அமைக்கும் பணி தொடங்கியது.

பெருந்துறை ஒன்றியத்தில் திருவாச்சி, என்.கந்தம்பாளையம், முள்ளாம்பட்டி, காஞ்சிக்கோவில் உள்பட 6 இடங்களில் கான்கிரீட்டில் புதிய கசிவு நீர் பாலங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது.

அடுத்த மாதம் 15-ந் தேதி கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும். அதற்குள் முடிக்கவேண்டும் என்று இரவு பகலாக பணிகள் நடைபெறுகின்றன.


Related Tags :
Next Story