புதிய நீதிமன்ற பணிகள்
வத்திராயிருப்பில் புதிய நீதிமன்ற பணிகள் குறித்து நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.
விருதுநகர்
வத்திராயிருப்பு,
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா பிரிக்கப்பட்டு கடந்த 2019-ம் ஆண்டு வத்திராயிருப்பு தாலுகா உருவாக்கப்பட்டது. வத்திராயிருப்பில் தாலுகா நீதிமன்றம் அமைப்பதற்காக யூனியன் அலுவலகம் பின்புறம் உள்ள பழைய தாலுகா அலுவலக கட்டிடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த இடத்தை ஏற்கனவே ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானம் பார்வையிட்டார்.
இதையடுத்து அங்கு சார்பு நீதிமன்றம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இ்ந்த பணிகளை நேற்று நீதிபதிகள் கிறிஸ்டோபர், கஜரா ஆர்.ஜிஜி, பூர்ண ஜெயஆனந்த், கோபிநாத், வத்திராயிருப்பு ஒன்றியக்குழு தலைவர் சிந்து முருகன், செயற்பொறியாளர்கள் தீபக், ஜெயா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story