பேரூராட்சி பணியாளர்களுக்கு புத்தாடை
சாம்பவர்வடகரை பேரூராட்சி பணியாளர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகள் வழங்கப்பட்டன.
தென்காசி
சுரண்டை:
சாம்பவர்வடகரை பேரூராட்சியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பேரூராட்சி தூய்மை பணியாளர்கள், மஸ்தூர் பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு செயல் அலுவலர் காயத்ரி தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் சீதாலட்சுமி முத்து பணியாளர்கள் அனைவருக்கும் புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத்தலைவர் நாலாயிரம் என்ற பாப்பா, நகர தி.மு.க. செயலாளர் முத்து, பணிக்குழு தலைவர் பழனிக்குமார், பேரூராட்சி உறுப்பினர்கள் சுடலைமுத்து, லட்சுமி, பட்டு, விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story