புதிய இ-சேவை மையம்


புதிய இ-சேவை மையம்
x
தினத்தந்தி 30 Jun 2023 1:00 AM IST (Updated: 30 Jun 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

நத்தம் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் புதிய இ-சேவை மையம் திறக்கப்பட்டது.

திண்டுக்கல்

நத்தம் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இ-சேவை மையம் திறப்பு விழா நடந்தது. இதற்கு நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என். கண்ணன் தலைமை தாங்கினார். தொடர்ந்து புதிய இ-சேவை மையத்தை முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளருமான நத்தம் ஆர்.விசுவநாதன் எம்.எல்.ஏ. திறந்து வைத்து பேசுகையில், இந்த மையத்தில் ஆதார் பெயர் சேர்த்தல், நீக்கம், நல வாரியம் பதிவு செய்தல், வாக்காளர் அடையாள அட்டை, சிறு, குறு விவசாயிகள் சான்றிதழ், பிறப்பு, இறப்பு சான்றிதழ், வேலைவாய்ப்பு பதிவு, புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளலாம். மேலும் மாதந்தோறும் முதல் சனிக்கிழமை இந்த மையத்தில் பொதுமக்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ராமராஜ், சின்னு, மணிகண்டன், சுப்பிரமணி, முருகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஜெயபாலன், மாவட்ட கவுன்சிலர்கள் சின்னாக்கவுண்டர், பார்வதி, ஊராட்சி தலைவர்கள் வேலம்பட்டி கண்ணன், ஜெயப்பிரகாஷ், ஆண்டிச்சாமி, சுப்பிரமணி, அவைத்தலைவர்கள் பிறவிக்கவுண்டர், சேக்ஒலி, நகர பொருளாளர் சீனிவாசன், உலுப்பகுடி கூட்டுறவு பால்பண்ணை தலைவர் சக்திவேல், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் முத்தையா, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் மணிகண்டன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி தலைவர் தினேஷ் குமார், நிர்வாகிகள் குப்பான், வாசுதேவன், குமார் உள்பட ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story