புதிய கல்வி அலுவலகம் கட்ட ஆலோசனை கூட்டம்
கொள்ளிடம் வட்டார புதிய கல்வி அலுவலகம் கட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.
மயிலாடுதுறை
கொள்ளிடம்;
கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிய வட்டார கல்வி அலுவலக கட்டிடம் கட்டுவது குறித்த ஆலோசனை கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றிய துணைதலைவர் பானுசேகர், ஒன்றிய ஆணையர் அருள்மொழி, வட்டார கல்வி அலுவலர்கள் சரஸ்வதி, கோமதி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞான புகழேந்தி, தமிழக ஆரம்ப ப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் சண்முகசுந்தரம் மற்றம் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 24 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டு தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ள கொள்ளிடம் வட்டார கல்வி அலுவலக கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்ட முடிவு செய்யப்பட்டது. மேலும் கொள்ளிடம் வட்டாரத்தை சேர்ந்த கிராமங்களில் உள்ள பழமையான பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
Related Tags :
Next Story