"இந்தியாவில் புதிய கல்விக் கொள்கை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்"- நெல்லையில் அண்ணாமலை பேச்சு


இந்தியாவில் புதிய கல்விக் கொள்கை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்- நெல்லையில் அண்ணாமலை பேச்சு
x

“இந்தியாவில் புதிய கல்விக் கொள்கை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்” என நெல்லையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பேசினாா்.

திருநெல்வேலி

"இந்தியாவில் புதிய கல்விக் கொள்கை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்" என நெல்லையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பேசினாா்.

பள்ளி விழா

நெல்லை அருகே தாழையூத்து பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். அவர் மாணவர்களிடம் கலந்துரையாடி, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

இந்தியாவில் மிக வேகமாக மாறிக்கொண்டே இருக்கும் துறை கல்வி துறை. இதனை நாம் ஏற்றுக்கொள்ள பழக வேண்டும். குழந்தைகளுக்கு முதல் ஆசிரியராக இருக்க வேண்டியவர்கள் பெற்றோர்கள் தான். அவர்கள் நம்மிடம் இருக்கும் நேரம் அதிகம். நம்மிடமிருந்து அதிகமாக கற்றுக் கொள்கிறார்கள். எனவே நாம் நல்ல பெற்றோர்களாக இருக்க வேண்டும்.

புதிய கல்விக் கொள்கை

மாணவர்களின் கல்வித் திறனை உயர்த்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி 2020-ல் புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்தார். அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் புதிய கல்விக் கொள்கை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஆசிரியர்கள் மாணவர்களை நல்ல மனிதராகவும், மாண்புமிக்கவராகவும் உருவாக்க வேண்டும். குழந்தைகள் தாம் எதற்காக பிறந்தோம் என்பதை உணர்ந்த பிறகு தான் அவர்களின் வாழ்க்கை தொடங்குகிறது. எனவே, குழந்தைகளை அவர்களுக்கு பிடித்ததை செய்ய அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story