ரூ.45.30 லட்சத்தில் புதிய உழவர் சந்தை-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்


ரூ.45.30 லட்சத்தில் புதிய உழவர் சந்தை-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 8 Dec 2022 12:15 AM IST (Updated: 8 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் ரூ.45.30 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய உழவர் சந்தையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் ரூ.45.30 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய உழவர் சந்தையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

புதிய உழவர் சந்தை

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. ஏ காலனியில் ரூ.45 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் புதிய உழவர் சந்தை கட்டப்பட்டு உள்ளது. இதில் 16 கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலையில் நடந்தது.

இதனை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் சென்னையில் இருந்து திறந்து வைத்தார்.

நெல்லையில் நடந்த நிகழ்ச்சிக்கு அப்துல்வகாப் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அப்துல்வகாப் எம்.எல்.ஏ. 16 உழவர்களுக்கு உழவர் அடையாள அட்டை வழங்கினார். தொடர்ந்து அவர் வேளாண் விளை பொருட்களின் விற்பனையை தொடங்கி வைத்தார்.

விலை பட்டியல்

முன்னதாக அவர் பேசியதாவது;- உழவர் சந்தை, விவசாயிகள் தங்கள் வேளாண் விளை பொருட்களை நேரடியாக இடைதரகர்கள் இன்றி பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள 16 கடைகளில் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் விலை பட்டியல் வைக்கப்படும். மேலும் உழவர்களின் கடைகளை கண்காணிக்க கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இதனை உழவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று பேசினார்.

நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில வர்த்தக அணி இணை செயலாளர் மாலைராஜா, முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், மாநகர செயலாளர் சுப்பிரமணியன், மாநகராட்சி கவுன்சிலர்கள் கருப்பசாமி கோட்டையப்பன், சகாய ஜூலியட்மேரி, அம்பிகா, பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன், அன்டன் செல்லத்துரை, வேளாண்மை இணை இயக்குனர் முருகானந்தம், துணை இயக்குனர் பூவண்ணன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த மாணவர்களுக்கான கலை இலக்கிய போட்டியை அப்துல்வகாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



Next Story