திருப்பரங்குன்றத்தில் புதிய தீயணைப்பு நிலையம் - காணொலி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்


திருப்பரங்குன்றத்தில் புதிய தீயணைப்பு நிலையம் - காணொலி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
x

திருப்பரங்குன்றத்தில் புதிய தீயணைப்பு நிலையத்தை காணொலி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

மதுரை

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் பாலாஜி நகரில் பை-பாஸ் ரோட்டின் கீழ்புறத்தில் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் கூடுதல் கட்டிடத்தில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிமூலமாக புதியதீயணைப்பு நிலையத்தை திறந்து வைத்தார். இந்த நிலையில் திருப்பரங்குன்றத்தில் புதியதாக திறக்கப்பட்ட தீயணைப்பு நிலையத்தில் மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர் குத்து விளக்கு ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் திருப்பரங்குன்றம் தாலுகா தாசில்தார் பார்த்திபன், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் துணை கமிஷனர் சுரேஷ், தீயணைப்பு நிலைய தென் மண்டல துணை இயக்குனர் விஜயகுமார், மதுரை மண்டல இயக்குனர் வினோத், திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார், கிராம நிர்வாக அலுவலர் மனோஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த தீயணைப்பு நிலையத்திற்கு 12000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 54 லட்சத்து 10, 100 ரூபாய் மதிப்பீட்டில் புதிய தீயணைப்பு வாகனம் வழங்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு நிலை அலுவலர் உள்பட 16 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


Next Story