ரூ.1½ கோடியில் புதிய மேம்பாலம், பள்ளி கட்டிட பணிகள்


ரூ.1½ கோடியில் புதிய மேம்பாலம், பள்ளி கட்டிட பணிகள்
x

ஆலங்காயத்தில் ரூ.1½ கோடியில் புதிய மேம்பாலம், பள்ளி கட்டிட பணிகளை செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயத்தில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் தீர்த்தம் என்ற இடத்தில் காட்டாற்று வெள்ளம் அதிக அளவில் செல்வதால், தரைப்பாலமாக இருப்பதை மேம்பாலமாக மாற்ற வேண்டும் என தொடர்ந்து அரசுக்கு கோரிக்கைகள் வந்தது. அதன் அடிப்படையில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் அங்கு மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி புதிய மேம்பாலம் கட்டும் பணிக்கு ரூ.1¼ கோடி நிதி ஒதுக்கப்பட்டு மேம்பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை, தீர்த்தம் பகுதியில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ. செந்தில்குமார் கலந்துகொண்டு பூமி பூஜை போட்டு பாலம் கட்டும் பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி செயலாளர் சிவக்குமார், முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் டி.பாண்டியன், மஞ்சுளா கந்தன், வாணியம்பாடி நகரமன்ற உறுப்பினர் ஹாஜியார் ஜகீர் அகமது, முன்னாள் கவுன்சிலர் பாரதிதாசன், குமார், பேரூராட்சி நிர்வாகிகள் பி.கே.எம்.சந்தோஷ், ஆர்.கே.சாமி, ராஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் ஆலங்காயம் பஸ் நிலையம் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் என்.விநாயகம், சிவக்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில்குமார் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பள்ளி கட்டிடத்திற்கான பணிகளை தொடக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் விஜய் சீனிவாசன், முரளி, பெரியகுரும்ப தெரு வெங்கடேசன், செல்வராஜ் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


Next Story