புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை பெரியார் நகரை சேர்ந்த மணிகண்டனின் மனைவி அபிநயா (வயது 25). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. இந்தநிலையில், அபிநயா நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இது குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் புதுக்கோட்டை ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story