புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

செந்துறை அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பலூர்

செந்துறை அருகே உள்ள மணப்பத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மனைவி பரிமளம். இவர்களுடைய மகள் சினேகா (வயது 21). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த, கருணாநிதி- வளர்மதி மகன் விக்கி என்கிற அன்புமதி என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு. மகிழ்மதி என்கின்ற பெண் குழந்தை பிறந்து 13 மாதங்கள் ஆகிறது. இந்தநிலையில் சினேகாவுக்கும் அவரது கணவரின் குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதில் மனமுடைந்த சினேகா நேற்று தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவரது உறவினர்கள் அவரை மீட்டு செந்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சினேகா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் குவாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். சினேகாவுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் அவர் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story